கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா ஆலோசனை கூட்டம்
ஆடி வெள்ளி விழா குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளி விழா ஊர் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 50-வது ஆண்டு விழா விமர்சையாக நடத்துவது குறித்து விழாக்குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், ஆடி முதல் வெள்ளி விழாவையொட்டி அடுத்த மாதம் (ஜூலை) 20-ந்தேதி (வியாழக்கிழமை) கோவில் வெளிவளாகத்தில் உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூழ்வார்க்கும் திருவிழா, கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் இருந்து பூங்கரகம் ஜோடித்து கோவில் வரை திருவீதி உலா, இரவில் கரகாட்டம், ஒயிலாட்டம், தாரை தப்பட்டையுடன் நூதன புஷ்பப்பல்லக்கு வீதி உலா நடத்துவது, 22-ந்தேதி (சனிக்கிழமை) கோவில் அருகாமையில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வருட அபிஷேக விழாவையொட்டி கோவிலில் சங்க அபிஷேகம் நடக்கிறது. வருடாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.. தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே 108 வலம்புரி சங்குகளிலும், கலசங்களிலும் புனித நீர் நிரப்பப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜைகள் நடைபெறும்.. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித சங்கு நீரினாலும், கலச நீரினாலும் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகம் நடத்தி மகா அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறும் என கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu