ஆரணி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தம்

ஆரணி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தம்
X

சிறப்பு கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. 

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்காததால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஆரணி அருகே சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்காததால் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல் பூண்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவராக சரஸ்வதி விஜயன் என்பவரும் துணைத் தலைவராக ஜோதிலட்சுமி பாபு என்பவரும் ஆறு வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி செயலாளராக சேட்டு என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

கல் பூண்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அங்குள்ள அம்மன் ஆலய வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி இல்லாமல் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி பங்கேற்றார்.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது மூன்றாவது வார்டு உறுப்பினர் உதயகுமார் என்பவர் திடீரென கூட்டத்திற்குள் நுழைந்து அதிகாரி மகாலட்சுமியிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டு எனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கே என கேள்விகளை எழுப்பினார்.

பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி வார்டு உறுப்பினர் உதயகுமாரை சமரசம் செய்ய முயன்றார். சமரசத்தை ஏற்க மறுத்த உதயகுமார் உரிய பதிலளிக்க வேண்டும், கிராம பொதுமக்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் பெயரளவிற்கு 100 நாள் பணியில் உள்ள பெண்களை அமர வைத்து ரகசியமாக கூட்டத்தை நடத்துவது ஏன் என்றும் அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தை பாதியில் நிறுத்துவதாக அதிகாரி மகாலட்சுமி தெரிவித்தார்.

இதனால் 100 நாள் பணிப்பெண்களும் கலைந்து சென்றனர். சிறப்பு கிராம சபை கூட்டம் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கூட்டத்தை நடத்தியதால் வார்டு உறுப்பினர் கேள்வி எழுப்பிய நிலையில் கூட்டத்தை அதிகாரிகள் பாதியில் ரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil