பட்டாசு வாங்கியதற்கு பணம் கேட்ட கடை உரிமையாளருக்கு அடி
பைல் படம்
ஆரணியில் பட்டாசு வாங்கியதற்கு பணம் கேட்ட கடை உரிமையாளரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் டவுன் பஜார் வீதியில் அஸிம் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் காட்டுகாநல்லூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தங்கராஜ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இறந்தவரின் உறவினர்கள் இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு பட்டாசு வாங்க அதே கிராமத்தை சேர்ந்த 7 பேர்கொண்ட கும்பல் பட்டாசு கடை வைத்திருக்கும் அஸிம் பட்டாசு கடைக்கு சென்று ரூபாய் 5 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை வாங்கியுள்ளார்களாம்.
வாங்கிய பட்டாசுக்கு பட்டாசு கடை உரிமையாளர் பணம் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் பணம் கேட்டு தர மறுத்துள்ளாதால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு 7 பேர் கொண்ட கும்மல் தகாத வார்த்தைகளால் திட்டியும், அங்கிருந்த கட்டைகள் மற்றும் தீ அணைப்பான் கருவிகளைக் கொண்டு பட்டாசு கடை உரிமையாளரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த பட்டாசு கடை உரிமையாளர் அஸிமை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பான காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை கொண்டு அஸிம் கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காட்டுகாநல்லூர் கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவரை கைது செய்து தலைமறைவான மற்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு பொருட்களை வாங்கி விட்டு பணம் கேட்ட கடை உரிமையாளரை தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu