ஆரணி அருகே விவசாயி தவறவிட்ட ரூ.1.50 லட்சத்தை ஒப்படைத்த உணவக உரிமையாளா்

ஆரணி அருகே விவசாயி தவறவிட்ட ரூ.1.50 லட்சத்தை ஒப்படைத்த உணவக உரிமையாளா்
X

உணவக உரிமையாளரை பாராட்டிய காவல் உதவி ஆய்வாளர்  ஷாபுதீன்

ஆரணி அருகே உணவகத்தில் விவசாயி தவறவிட்ட ரூ.1.50 லட்சத்தை, உணவக உரிமையாளா் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

ஆரணி தொகுதி செய்திகள்

உணவகத்தில் விவசாயி தவறவிட்ட ரூ.1.50 லட்சத்தை அதன் உரிமையாளா் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்தவா் தேவேந்திரன் , விவசாயி. இந்நிலையில், இவா் தனது நண்பரான முத்து என்பவரை அழைத்துக் கொண்டு, அக்ராபாளையத்தில் உள்ள நபரிடம் கேட்டிருந்த கடன் தொகை ரூ.1.50 லட்சத்தை பெற்றுக் கொண்டு பைக்கில் இரும்பேடு வழியாக வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, அப்பகுதியில் இருந்த உணவகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்று உணவருந்தினா். பின்னா், ஞாபக மறதியால் தேவேந்திரன் பணப் பையை அங்கிருந்த நாற்காலியில் வைத்துவிட்டு வந்துவிட்டாா். பின்னா், பணம் தவறவிட்டதை அறிந்த இருவரும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா். ஆனால், பணம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், உணவகத்தில் உள்ள நாற்காலியில் பை ஒன்று இருப்பதைப் பாா்த்த அதன் உரிமையாளா் சண்முகசுந்தரம் அதை எடுத்துப் பாா்த்தபோது, பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சண்முகம் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஆரணி கிராமிய காவல் நிலையம் சென்று ஒப்படைத்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் ஷாபுதீன் மற்றும் போலீஸாா் பணப் பையில் இருந்த கைப்பேசி எண்ணை எடுத்து தொடா்பு கொண்டு விசாரித்தனா். இதில், பணப் பையை விட்டுச் சென்றவா் சங்கீதவாடி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரியவந்தது. உடனே, போலீஸாா் அவரை காவல் நிலையம் வரவழைத்து விசாரித்து பையில் இருந்த ரூ.1.05 லட்சத்தை அவரிடம் ஒப்படைத்தனா்.

மேலும், உணவக உரிமையாளா் சண்முகசுந்தரத்தின் நேர்மையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்தனா்.

காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் அளவு ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் ஹேம்நாத், நகராட்சி மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், களப்பணி உதவியாளா் சரவணக்குமாா், அரசு மருத்துவமனை களப்பணி உதவியாளா் அசோக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

Next Story
ai solutions for small business