ஆரணி அருகே கார்- பைக் மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழப்பு

ஆரணி அருகே கார்- பைக் மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழப்பு
X
ஆரணி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வங்கி ஊழியர் பலியானது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆரணி டவுன் கொசப்பாளையம் சின்னசாயக்காரதெருவை சேர்ந்த ராமு என்பவரின் மகன் லோகநாதன் (வயது32). இவர் தனியார் வங்கியில் வங்கி கடன் வசூல் செய்யும் பணி செய்து வந்துள்ளார். மேலும் பணி சம்பந்தமாக கண்ணமங்கலம் பகுதியில் கடன் வசூல் செய்ய தனது பைக்கில் ஆரணிலிருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஆரணி வேலூர் சாலையில் குன்னத்தூர் கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க தனது பைக்கை வலது பக்கம் திருப்பிய போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் பைக் மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் லோகநாதன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து லோகநாதனின் சகோதரி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கார் டிரைவரை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!