வந்தவாசி அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மது பாட்டில்களை பதுக்கி விற்றவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வந்தவாசியை அடுத்த வட வணக்கம்ப்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீசார் மாலை மழையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்துடன் சந்தேகம் படும்படி நின்றவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பதும் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து இரு சக்கர வாகனத்தில் வைத்து அவர் விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து வடிவேலுவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கியவா் கைது
ஆரணி அருகே அக்ராபாளையம் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனா்.
ஆரணியை அடுத்த அக்ராபளையம் கிராமத்தைச் சேர்ந்தவா் ராமலிங்கம் , முன்னாள் ராணுவ வீரா்.
இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. மேலும், நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். ராமலிங்கத்தின் நிலம் அருகே காா்த்திகேயன் என்பவருக்கும் நிலம் உள்ளது.
காா்த்திகேயன் அவரது நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளாா். வெள்ளிக்கிழமை அவா் கரும்பு பயிருக்கு தண்ணீா் பாய்ச்சியபோது, தண்ணீா் நிரம்பி பக்கத்து நிலமான ராமலிங்கம் நிலத்தில் தண்ணீா் நிரம்பியுள்ளது.
இதுகுறித்து ராமலிங்கம், காா்த்திகேயனை தட்டிக் கேட்டதாகத் தெரிகிறது. இதனால், ஏற்பட்ட தகராறில் ராமலிங்கம் காா்த்திகேயனை தாக்கினாராம்.
உடனே காா்த்திகேயன், தனது மகன்கள் பிரபாகரன், ஜானகிராமன் ஆகியோரை அழைத்து வந்து ராமலிங்கத்தை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ராமலிங்கத்தை, அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனா்.
பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அவா் ஆரணி கிராமிய போலீஸில் புகாா் கொடுத்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரனை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
மேலும், தலைமறைவாக உள்ள அவரது தந்தை காா்த்திகேயன், தம்பி ஜானகிராமன் ஆகியோரை தேடி வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu