/* */

மகளிர் உரிமைத் தொகை பெற வங்கியில் குவிந்த பெண்கள் கூட்டம்

ஆரணியில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை பெற வங்கியில் பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

மகளிர் உரிமைத் தொகை பெற வங்கியில் குவிந்த பெண்கள் கூட்டம்
X

வங்கியின் முன் குவிந்த பெண்கள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற பெண்கள் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கலைஞரின் மகளிர் உரிமை திட்டத்தொகை திட்டம் கடந்த 15 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தமிழக முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் முதல் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தமிழக முழுவதும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதலே ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பெண்கள் மற்றும் ஆண்கள் குவிய தொடங்கினார்கள்.

ஏற்கனவே முதியோர் உதவித்தொகை, 100 நாள் பயனாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், வங்கி கணக்கில் பணம் எடுத்தல் , செலுத்துதல் தொடர்பாக கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

நாளை விடுமுறை தினம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சுபமுகூர்த்த தினம் , என்பதாலும் பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

இந்நிலையில் அரசு வழங்கிய ரூபாய் 1000 தனது வங்கி கணக்கில் சரியாக செலுத்தப்பட்டுள்ளதா என பெண்கள் ஒரே நேரத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் வங்கியில் குவிந்தனர். வங்கி ஊழியர்கள் உங்களுடைய கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும் அதுவரை காத்திருங்கள்.

தற்போது சர்வர் பழுதடைந்ததால் உங்களுக்கு குறுஞ்செய்திகள் வரவில்லை, சிறிது நேரத்திற்கு பிறகு வந்துவிடும் என கூறினர். இதில் ஒரு சிலர் மட்டும் கலைந்து சென்றனர்,

மற்றவர்கள் தங்களுடைய கணக்கு புத்தகத்துடன் தங்களுக்கு அரசு வழங்கிய பணம் சேர்ந்து விட்டதா என பார்ப்பதற்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். இதனால் வங்கிக்கு வந்திருந்த முதியவர்கள் பெண்கள் மூச்சுத்திணறி கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

குறுஞ்செய்தியை பார்த்து ஷாக் ஆன பெண்கள்

அப்பொழுது ஒரு சில பெண்கள் தங்களுக்கு குறுஞ்செய்தி வந்ததாகவும் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை என்றும் தெரிவித்து புலம்பி கொண்டிருந்தனர்.

அவர்களிடத்தில் விசாரித்ததில் வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் அபராதமாக பணத்தை எடுத்துக் கொண்டதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

ஜன் தன் வங்கிக்கணக்கை தவிர மற்ற அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டியது அவசியம். ஊரக பகுதிகள், நகரங்களுக்கு ஏற்ப இந்த அபராத தொகை மாறுபடும். இந்த இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால், கணக்கில் பணம் வந்தவுடன் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம்.

வங்கிக்கணக்கு தொடங்கும்போதே இதற்கான கையெழுத்தை வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் பெற்றுக்கொள்வது வழக்கம். ஒரு சில தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகள் அபராதம் வசூல் செய்யப்படுகிறது.

அதன்படி தமிழ்நாடு அரசு செலுத்திய ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை வங்கியில் வந்தவுடன் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் அபராதமாக குறிப்பிட்ட தொகையை பிடித்துக் கொண்டனர்.

இதனால் அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்தது என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Updated On: 17 Sep 2023 2:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு