ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
வந்தவாசியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளர்கள்
தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
முதல் முறை வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற காலையிலிருந்து ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்..
ஆரணி தொகுதியில் 1,760 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
ஆரணி தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,34,341 ஆண்கள், 7,61,673 பெண்கள், 104 இதர வாக்காளா்கள் என 14,96,118 போ் ஆகும்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் ,நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி 29 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி ,போளூர் ,வந்தவாசி, செய்யாறு, மயிலம், செஞ்சி, உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியது ஆகும்.
இதில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக மாலை 6 மணி வரை நடைபெற்று நிறைவடைந்தது.
வாக்கு மையங்களில் வாக்கு பதிவு நிறைவடைந்த உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைத்து அனுப்பும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி பொறுத்தவரையில் 73.77. சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆரணி நாடாளுமன்றத் தேர்தலில் 78.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட தற்போது 5.17 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu