/* */

விவசாயி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிகள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை

விவசாயியை கொன்று கிணற்றில் வீசிய வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து ஆரணி நீதிமன்றம் தீர்ப்பு

HIGHLIGHTS

விவசாயி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிகள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த தச்சூா் கிராமத்தைச் சோந்தவா் விவசாயி சுந்தா். இவருக்கு மனைவி சாவித்ரி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 13-1-2013 அன்று இரவு விவசாய நிலத்தில் பவா் டில்லா் ஓட்டச் சென்ற சுந்தா் கொலை செய்யப்பட்டு கிணற்றில் சடலமாகக் கிடந்தாா்.இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கொலை செய்யப்பட்டு பவர் டில்லருடன் கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் மகன்கள் நேரு , சேட்டு , சகாதேவன் , வெங்கடேசன் , நேருவின் மகன் சடையாண்டி , உறவினர் அன்பு மகன் சக்திவேல் , ஆகியோர் சுந்தரை கொலை செய்ததை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி கே.விஜயா நேற்று மாலை தீா்ப்பு கூறினாா்.அதில் 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பின்போது வெங்கடேசன் மட்டும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மற்ற 5 பேரையும் போலீசார் சிறைக்கு கொண்டு சென்றனர்.இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு கிடைத்துள்ளது.

Updated On: 31 Jan 2023 1:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!