ஆரணி அருகே சுதந்திர தின அணிவகுப்பில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

தேசிய கொடியுடன் கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில்உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும பொறியியல் கல்லூரியில் ஏ.சி.சண்முகம் வழிகாட்டுதலின்படி 75வது சுதந்திர தின அணிவகுப்பு விழா நடைபெற்றது.
பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு கல்லூரி குழும செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி, ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி பங்கேற்றார்.
பின்னர் ஆரணி கோட்டாச்சியர் தனலட்சமி தேசிய கொடியை மாணவர்களுக்கு வழங்கி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். பள்ளி மைதானம் முழுவதும் தேசிய கொடியை ஏந்தி மாணவர்கள் உற்சாகத்துடன் அணிவகுப்பு நடத்தி ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் சமர்பணம் செய்தனர்.
மேலும் பொறியியல் கல்லூரி மைதானத்தில் பாலிடெக்னிக், பள்ளி ,மாணவ மாணவிகள், கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து ஓரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி கொடியை அசைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், பேராசிரியர் சிவா, பள்ளி கல்லூரி முதல்வர்கள் வையாபுரி, செலின்திலகவதி, ரஞ்சினி, அருளாளன், நிர்வாக அலுவலர் கார்த்திக்கேயன், துணை தாசில்தார்கள் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் பாலிடெக்னிக் முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu