திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு
காட்டுப்பகுதியில் கள்ள சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அவர்களின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியில் போலீசார் அதிரடியாக இறங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உட்கோட்டத்தில் இதுவரை சாராயம் காய்ச்சிய மற்றும் சாராயம் விற்பனை செய்த பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையில் வடுகசாத்து பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்ட போது மீனா என்கின்ற பெண்மணி அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் அடுப்பின் மூலம் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காவலர்கள் அந்தப் பெண்மணியை கைது செய்து அவர்களிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்த சாராய ஊறலை அழித்த போலீசார், மாவட்ட எல்லையில் உள்ள மலைப்பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை கைது செய்தனர்
ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது இடத்தில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரணி தாசில்தார் ரா.மஞ்சுளா தலைமையில் மண்டல துணை தாசில்தார் அய்யப்பன் (மேற்கு), வருவாய் ஆய்வாளர்கள் நித்யா, ரமேஷ், அசோக்குமார் மற்றும் செய்யாறு கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் வெங்கட்ராமன், வடுகசாத்து கிராம நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள வைக்கோல் போரில் ஒரு பேரலில் சாராய ஊறல் இருந்தது.
மேலும் அவருக்கு சொந்தமான நிலத்தில் 3 பேரல்களில் சாராய ஊறல் மற்றும் சாராயம் இருந்தது. மேலும் சாராயம் காய்ச்சுவதற்கான வெல்லம், டயர் டியூப்கள், பட்டை, பூச்சிமருந்து டப்பாக்களும் சாராயம் ஊற்றி விற்பதற்கான தண்ணீர் பாட்டில்களும் இருந்தன. இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் முன்னிலையில் 4 பேரல்களில் இருந்த சாராய ஊறலை அழித்தனர்.
மேலும் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த தீர்த்தம்மாள், லாடவாரம் பகுதியை சேர்ந்த ஆந்தாயி மட்டதாரி கிராமத்தை சேர்ந்த சுசிந்திரன் ஆகிய 3 பேர் அரசு மதுபாட்டிகள் பதுக்கி வைத்து விற்று கெண்டிருந்தனர். அவர்கள் போலீசார் பிடித்து சுமார் 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu