50 சதவீத இருக்கை: பேருந்துகளில் காவல் துறையினர் ஆய்வு

50 சதவீத இருக்கை: பேருந்துகளில் காவல் துறையினர் ஆய்வு
X

அனைத்து பேருந்துகளிலும்‌ 50 சதவீத இருக்கைகள்‌ பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து  ஆய்வு செய்‌தனர்.

அனைத்து பேருந்துகளிலும்‌ 50 சதவீத இருக்கைகள்‌ மட்டும் பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்‌தனர்

திருவண்ணாமலை மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ பவன்குமார்‌ உத்தரவின்பேரில்‌, கொரோனா தொற்று மற்றும்‌ ஓமைக்ரான்‌ பரவலை கட்டுப்படுத்தும்‌ வகையில்‌, காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன்படி, கண்ணமங்கலம்‌ காவல்‌ ஆய்வாளர்‌ சாலமோன்ராஜா மற்றும்‌ உதவி காவல்‌ ஆய்வாளர்‌ விஜயகுமார்‌ தலைமையிலான போலீஸார் பேருந்தில்‌ பயணம்‌ செய்கின்ற பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து அனைத்து பேருந்துகளிலும்‌ 50 சதவீத இருக்கைகள்‌ பயன்படுத்தப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்‌தனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்