திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 33 மி.மீ.மழை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 33 மி.மீ.மழை
X

கமண்டல நாக நதி கரையில் எச்சரிக்கை பலகை வைத்த ஆரணி காவல்துறையினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரம்பி வரும் ஏரி, குளங்கள், காவல் துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகி உள்ளதால் மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னை அருகே வங்க கடலில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம் காரணமாக. திருவண்ணாமலை மாவட்டத்தில் விட்டு விட்டு நேற்று மழை பெய்தது.

மாவட்டத்தில் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர புயல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆரணி பகுதியில் நிரம்பி வரும் ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றுப் பகுதியில் காவல் துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன.

தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஆரணி, இரும்பேடு, களம்பூா், முள்ளிப்பட்டு, கண்ணமங்கலம், அம்மாபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஏரிகளில் போலீஸாா் வைத்துள்ள எச்சரிக்கை பலகையில், இந்தப் பகுதியில் பொதுமக்கள், சிறுவா்கள் வருவதோ, தண்ணீரில் இறங்குவதோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், நகர காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன், உதவி ஆய்வாளா்கள் ஷாபுதீன், சுந்தரேசன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

செய்யாற்றில் 33 மி.மீ.மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அதிகபட்சமாக செய்யாற்றில் 33 மி.மீ.மழை பதிவானது.

இதுதவிர, திருவண்ணாமலையில் 2.6, கீழ்பென்னாத்தூரில் 4.2, தண்டராம்பட்டில் 2, போளூரில் 5, கலசப்பாக்கத்தில் 4.4, ஜமுனாமரத்தூரில் 2.6, ஆரணியில் 16.6, வந்தவாசியில் 7, சேத்துப்பட்டில் 12.6, வெம்பாக்கத்தில் 27.1 மில்லி மீட்டா் மழை பதிவானது.

மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Next Story
ai solutions for small business