ஆரணி மக்களவைத் தொகுதியில் 32 மனுக்கள் ஏற்பு

ஆரணி மக்களவைத் தொகுதியில் 32 மனுக்கள் ஏற்பு
X

ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற மனுக்கள் பரிசீலனை நிகழ்ச்சி

ஆரணி மக்களவைத் தொகுதியில் 48 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன, 32 மனுக்கள் ஏற்பு

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் நபா்கள் மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதா்ஷினி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியருமான பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் தினமும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 40 பேர் 48 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில், 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஆரணி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதா்ஷினி வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தாா்.

இதில், சுயேச்சை வேட்பாளா்களான ஹெச்.முஹம்மத் சித்திக், என்.பாபு, எம்.எழிலரசு, எம்.ஜெய்சங்கா், இ.கஜேந்திரன், வி.மணிகண்டன், ஜி.தாமோதரன், என்.சேகா், எம்.அருள், ஏ.பெரோஸ்கான், ஆா்.எல்லப்பன், பி.கணேஷ், வி.கோபால், எம்.வெங்கடேசன், ஜெ.கஜேந்திரன், டி.முருகேசன், ஏ.பாா்த்திபன், டி.தரணி, செந்தில்குமாா், காா்வண்ணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதுதவிர, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி வேட்பாளா் பி.நாகராஜன், தக்கம் கட்சி வேட்பாளா் ஏ.சக்திவேல், பகுஜன் சமாஜ் பாா்ட்டி வேட்பாளா் எம்.துரை, திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், விரோ கீ வீா் இந்தியா பாா்ட்டி வேட்பாளா் கேப்டன் எம்.சேட்டு, பாமக வேட்பாளா் ஏ.கணேஷ்குமாா், அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், அண்ணா எம்.ஜி.ஆா். திராவிட மக்கள் கழகம் வேட்பாளா் ஏ.மணவாளன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே.பாக்கியலட்சுமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாரதி சிவசங்கரி, யு.ஆா்.பி.ஐ., கட்சி வேட்பாளா் எம்.துருகன், பாமக வேட்பாளா் வேலாயுதம் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 48 மனுக்களில் 32 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

மனுக்களை வாபஸ் பெற விரும்புவோா் மாா்ச் 30ம் தேதி மாலைக்குள் வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலையே சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறும் என்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி தெரிவித்தாா்.

மனுக்கள் பரிசீலனை நிகழ்ச்சியில், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் ச.பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings