குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 உரிமையாளர்களுக்கு அபராதம்

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 உரிமையாளர்களுக்கு அபராதம்
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 3 உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

மேலும் கோர்ட்டு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபதாரம் அல்லது 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும்.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வளரிளம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் 3 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. 3 வளரிளம் தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.

இதில் 3 உரிமையாளர்களுக்கு கோர்ட்டில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil