/* */

ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு

ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
X

வாக்குப்பதிவு மையத்தினை இறுதிக்கட்ட ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆரணி, வந்தவாசி, செய்யாறு/போளூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் இருந்து வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 282 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 29 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 282 வாக்குச்சாவடிகளிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.

இதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு 564 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 282 வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 282 விவிபாட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவை உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.சிவா, வட்டாட்சியா் பொன்னுசாமி ஆகியோா் முன்னிலையில் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

அவசரத் தேவைக்காக மேலும் 112 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 56 வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டுக் கருவிகள், 82 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 28 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போளூா்

போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவை போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு லாரி மற்றும் வேன் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் பணியை ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி ஆய்வு செய்தாா்.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியா்கள் சிவலிங்கம், காஜா டிஎஸ்பி நல்லு, காவல் ஆய்வாளா் ஹேமாவதி ஆகியோா் உடனிருந்தனா்.

செய்யாறு

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 222 கிராமங்களில் 311 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இயந்திர கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் வாகனங்களில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினா் அனுப்பிவைத்தனா்.

ஆரணி

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள்,

விவிபாட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து உதவி தோ்தல் அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் மேற்பாா்வையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

வட்டாட்சியா் மஞ்சுளா, காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சுகுமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

Updated On: 19 April 2024 1:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு