19 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியர் வழங்கல்

19 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா: ஆட்சியர் வழங்கல்
X

19 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டாவை கலெக்டர் முருேகஷ் வழங்கினார்.

திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் வசிக்கும் 19 குடும்பத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் 19 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டாவை கலெக்டர் முருேகஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் பழைய டான்காப் உள்ள பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்திற்கு அருகில் நில எடுப்பு செய்யப்படும் பட்டா இடத்தில் வசிக்கும் 19 குடும்பத்திற்கு மாற்று இடமாக திருவண்ணாமலையில் 4613.50 சதுர மீட்டர் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசால் ஆணை அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அந்த 19 குடும்பத்தினருக்கு மாற்று இடத்திற்கான வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு

ஆரணி அருகே முதியோர் இல்லத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் போதிமரம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ப.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது முதியவர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா?, தங்கும் வசதி, மருத்துவ வசதி ஏற்பாடு செய்து தருகிறார்களா? என கேட்டு அறிந்தார்.

அதைத் தொடர்ந்து ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஏந்துவம்பாடி, முக்குரும்ப, பால்வார்த்து வென்றான் மற்றும் கஸ்தம்பாடி ஆகிய கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தீவிரமாக ஆய்வு செய்தார். ஏந்துவம்பாடியில் நடைபெற்று வரும் புதிய தொடக்கப்பள்ளி கான கட்டிடப் பணிகளை பார்வையிட்டார்

கட்டிட வேலை நடைபெறும் போது அதற்கான பொருட்களை வகுப்பறைக்குள் வைத்திருந்ததால் மிகவும் ஆத்திரப்பட்ட அவர் உடனடியாக அந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். ஒரு பள்ளி என்பது அதற்குரிய மரியாதை உடன் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அந்த ஊரில் இருக்கக்கூடிய 100 நாள் வேலை திட்டத்திற்கான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு அதற்கும் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் தட்சூரில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் வீடுகள் கட்டுமான பணி நடைபெற்று வருவதையும், போளூர் ஊராட்சி ஒன்றியம் ஏந்துவாம்பாடி ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டும் பணி நடைபெற்று வருவதையும், முருக்கும்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து பள்ளி கட்டடம் புணரமைத்தல் பணி நடைபெற்று வருவதையும், கஸ்தாம்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பால்வார்த்து வென்றான் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டும் பணி புதிய சமயலறை கூடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும்,

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய எரிவாயு மின் தகன மேடை அமைக்கப்பட்டு வருவதையும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பட்டு வருவதையும், போளூரில் ஒப்படைக்கபட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, ஆரணி தாசில்தார் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன், திலகவதி, சவிதா மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கள ஆய்வாளர்கள், அனைத்து அரசு துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.

Tags

Next Story