/* */

ஆரணி: ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்

ஆரணியில், கடையில் ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

ஆரணி: ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி-மயக்கம்
X

ஜூஸ் வாங்கி குடித்து  18 பெண் தொழிலாளர்களுக்கு திடீர் வாந்தி - மயக்கம் காரணமாக, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில், குமரேசன் என்பவரின் விளைநிலத்தில், அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி உள்ளிட்ட 18 பேர் விவசாய வேலை செய்து வந்தனர். அவர்கள் களம்பூரில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் ஜூஸ் வாங்கி குடித்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை அவர்கள் 18 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது.

அவர்கள் அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்