திருவண்ணாமலை மாவட்டத்தில் 161 பதற்றமான வாக்குச்சாவடிகள்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 161 பதற்றமான வாக்குச்சாவடிகள்: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் அருந்ததியர் காலனி குடியிருப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் மரப்பொருட்கள் உற்பத்தியினை பார்வையிட்டார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 161 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 161 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

அப்போது பயணியர் விடுதியில் நிருபர்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் பார்வையாளர் வந்து பார்வையிட உள்ளார். மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 161 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த 161 வாக்குச்சாவடி மையங்கள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி முடிக்கப்பட்டது. வருகிற 9-ந் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் படுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் சந்தவாசல் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவி குழுவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

போளூர் ஊராட்சி ஒன்றியம் குருவிமலை ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தார். போளூர் ஊராட்சி ஒன்றியம் கஸ்தம்பாடி ஊராட்சியில் அருந்ததியர் காலனி குடியிருப்பில் நான்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் மரப்பொருட்கள் உற்பத்தியினை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai automation digital future