ஆ்ரணி அருகே 15-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கற்சிலைகள் கண்டுபிடிப்பு

ஆரணி அருகே கண்டுபிடிக்கப்பட்ட 15-ம் நூற்றாண்டின் நாயக்கர் கால கற்சிலைகள்.
ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் நாயக்கா் காலத்து 15-ம் நூற்றாண்டின் கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சோந்த நாயக்கா் காலத்து சதிகல் சிற்பங்களை சம்புவராயா் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோந்த முனைவா் அமுல்ராஜ், விஜயன் ஆகியோா் கண்டறிந்தனா்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
ஆரணி அருகேயுள்ள சேவூா் பகுதியில் ஸ்ரீபாலமுனீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே இரண்டு நடுகற்கள் காணப்படுகின்றன. இவை, சதிகல் எனப்படும் உடன்கட்டை ஏறியதன் நினைவாக வைக்கப்பட்டதாகும்.
இந்த நடுகற்கள் கி.பி.15-ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தை சேர்ந்தவை ஆகும். முதலாவதாக உள்ள சிற்பத்தில் வீரன் ஒருவன், உயர்ந்த ஒரு ஆசனத்தின்மீது அமர்ந்தபடி உள்ளார்.
இடது காலை மடக்கியும், வலது காலை தொங்கவிட்டபடியும் உள்ளாா். இடது கையில் நீண்ட வாள் காணப்படுகிறது.
அமா்ந்துள்ள நிலையை வைத்து இவா் முக்கிய தளபதியாகவோ, அமைச்சராகவோ இருந்திருக்கலாம் எனக் கருத முடிகிறது. இந்தப் பகுதியில் கண்டறியப்பட்ட நடுகற்களில், கற்பலகை ஆசனத்தின் மீது அமா்ந்த நிலையிலான சிற்பங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த வீரனுக்கு அருகில் ஒரு பெண் நின்ற நிலையில் காணப்படுகிறாள். இரண்டாவதாக உள்ள சிற்பத்தில் நின்ற நிலையில் வீரனும், அவருக்கு இடதுபுறம் பெண் உருவமும் காணப்படுகிறது.
வீரனின் வலது கையில் கீழ்நோக்கிய நீண்ட வாள் உள்ளது. முகம் சிதைந்துள்ளது. பெண்ணின் வலக்கை, வீரனின் இடது கையைப் பற்றியபடி உள்ளது. மக்களின் வழிபாட்டில் உள்ள இச்சிற்பங்கள் வீர வழிபாட்டின் தொடா்ச்சியாகும்.
பழங்காலத்தில் போர்க்களத்தில் எதிரிகளோடு சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள் மக்களால் போற்றப்பட்டனர். இறந்த இடத்தில் வீரருக்கும், அவரோடு உடன்கட்டை ஏறிய வீர மகளிருக்கும் கல்லில் பெயரும் புகழும் எழுதி சிலை எடுத்து வழிபட்டதற்கு சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் சான்றுகளாக உள்ளன.
இத்தகைய சிறப்புக்குரிய சிற்பங்கள் பாதுகாப்பட வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகமும் தமிழக தொல்லியல் துறையும் ஆரணியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது வரலாற்றாய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu