இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
X
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்தது.

இளம்பெண்ணை ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை, இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு அளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம், அரியாப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன், இவரும், 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

மேலும், அந்தப் பெண்ணை, பிரபாகரன் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், அந்தப் பெண் கா்ப்பம் அடைந்துள்ளார்.

இதன்பிறகு திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கேட்டபோது, பிரபாகரன் அதற்கு மறுத்து அவருக்கு மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, ஆரணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, கே.சுஜாதா, குற்றம் சுமத்தப்பட்ட இளைஞா் பிரபாகரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து, போலீஸாா் பிரபாகரனை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை, போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செய்யாறு கொடநகா் நல்ல தண்ணீா் குளத் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் சென்ட்ரிங் தொழிலாளி.

இவா், பத்தாம் வகுப்பு பயிலும், 14 வயது கூலித் தொழிலாளி மகளை கடந்த சில ஆண்டுகளாக கேலி, கிண்டல் செய்து வந்தாராம்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவியை, விஜயகுமாா் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த மாணவியின் தாய், செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

Tags

Next Story
ai solutions for small business