பேருந்து மோதி விபத்து -முதியவர் பலி

பேருந்து மோதி விபத்து -முதியவர் பலி
X

ஆரணியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதி முதியவர் பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது அந்த வழியே பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் நிலைதடுமாறிய முதியவர் பின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆரணி நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பேருந்து சக்கரத்தில் சிக்கி கிடந்த முதியவரை மீட்டு ஆரணி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பொழுது முதியவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பேருந்தை கைப்பற்றி தப்பி ஓடிய தனியார் பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான முதியவர் யார் என்பதை குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business