உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
X

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இறக்கப்படும் உர மூட்டைகள் (பைல் படம்)

Latest Agriculture News -திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என்று வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்

Latest Agriculture News -திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் சரவணன், எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்

நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 4,294 டன் யூரியா, 1,614 டன் டி.ஏ.பி., 855 டன் பொட்டாஷ், 7,268 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 387 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வளஅட்டை பரிந்துரையின் படி பயிறுக்கு தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயனடையலாம். தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை முனைய கருவி வாயிலாக விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்ய வேண்டும். விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை அளித்து தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து மண்பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவுபடி உரங்களை பெற்ற பயன்அடையலாம்.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய விலையிலான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

மாவட்டத்தில் போதிய அளவு உரம் இருப்பில் உள்ளது. உரம் தட்டுப்பாடு என்ற வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நடப்பு பருவத்துக்கு தேவையான 1,459 டன் யூரியா (எம்.எல்.எல்), 418 டன் யூரியா (எம்.சி.எப்.எல்.), 215 டன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் சென்னை மணலி மற்றும் காட்பாடி, முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு வந்தது.

அதை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் உரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டில் மாநில அளவில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் புதிய விவசாயிகள் தொழில்நுட்பங்களையும், புதிய இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதி உடைய விவசாயிகள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் முதலில் தங்கள் தொலைப்பேசியில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக தனது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம் என்றும், மேலும் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஒரே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வட்டார வேளாண் அல்லது துணை வேளாண் விரிவாக்கம் மையத்தில் நுழைவு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பம் படிவத்தை இணைத்து வேளாண் உதவி இயக்க அலுவலகத்தில் நேரில் சென்று படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வு குழுக்களால் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மாநில தேர்வு குழு பரிந்துரை செய்யப்படும்,

அதன் பிறகு விண்ணப்பங்கள் மாநில குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு விவசாயியும், புதிய வேளாண் இயந்திரம் கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படும், விருப்பம் உள்ள தகுதியும் உள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!