திருவண்ணாமலையில் இன்று மதியம் வரை 752 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவண்ணாமலையில் இன்று மதியம் வரை  752 பேர் வேட்பு மனு தாக்கல்
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மதியம் நிலவரப்படி 752 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும், 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன.

இந்த நிலையில் இன்று வேட்பாளர்கள் விறு, விறுப்பாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதையொட்டி சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் சுயேச்சையை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் வரும் போது அவர்களுடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்களை போலீசார் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பே தடுத்து நிறுத்தினர். இதனால் வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற அலுவலகங்கள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.



Tags

Next Story
ai in future agriculture