திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளில் 563 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. 15 வார்டுகளுக்கும் 80 பேர் கட்சி சார்பாகவும், சுயேச்சையாகாவும் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர். 5-ந்தேதி நடந்த பரிசீலினை போது 80 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
மனுக்கள் திரும்ப பெற கடைசிநாளான நேற்று 16 பேர் மனுக்களை திரும்ப பெற்றனர்.
இறுதி கட்ட வேட்பாளர்களாக திமுக - 13, காங்கிரஸ் - 1, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 1, அதிமுக - 14, பா.ஜ.க - 5, பா.ம.க.-7, நாம் தமிழர் கட்சி - 15, சுயேட்சை - 8 என மொத்தம் 64 வேட்பாளர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்து இறுதிகட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான ஜெயபிரகாஷ் வெளியிட்டார்.
6 வது வார்டில் காங்கிரஸ் - பா.ஜ.க நேரடியாக போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியினர் 15 வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர்.
15 வார்டுகளிலும் மனுதாக்கல் செய்திருந்த அதிமுக வேட்பாளர்களில் 2-வது வார்டுக்கு மனுதாக்கல் செய்திருந்த குமாரி, வேட்புமனுவை திரும்ப பெற்றது அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
வேட்டவலம் பேரூராட்சியில் 51 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் 15, அதிமுக சார்பில் 15, பாமக சார்பில் 4, பாஜக 4, தேமுதிக 1, நாம் தமிழர் கட்சி 1, சுயேட்ச்சைகள் 11, பேர் என மொத்தம் 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில் ஆண் வேட்பாளர்கள் 24 பேர் மற்றும் 27 பேர் பெண் வேட்பாளர்கள்.
சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 70 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக 16, அதிமுக 18, காங்கிரஸ் 1, விடுதலை சிறுத்தைகள் 1, பாஜக 6, பாமக 4, தேமுதிக 1, சுயேட்சைகள் 23, பேர் போட்டியிடுகின்றனர்.
பெரணமல்லூர் பேரூராட்சியில் 44 பேர் போட்டி
பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக 10, அதிமுக 10, காங்கிரஸ் 1, பாஜக 4, பாமக 11, தேமுதிக 2, கம்யூனிஸ்ட் 1, அமமுக 2, சுயச்சை 3, என மொத்தம் 44 பேர் போட்டியிடுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu