திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 பள்ளி கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்படும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 73 பள்ளி கட்டிடங்கள் முழுமையாக இடிக்கப்படும்
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 143 பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிக்கும் நிலையில் உள்ளதாக கலெக்டர் கூறினார்

தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இணை இயக்குனர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் இணை இயக்குனர் ஸ்ரீ தேவி தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளின் உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச் சுவர்கள் , மற்றும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் ஆய்வு செய்து பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிய வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை ,பொதுப்பணித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களை கொண்டு ஒன்றியம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுக்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் தனியார் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 143 பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிக்கும் நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 73 பள்ளி கட்டிடங்கள் முழுமையாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகள் முன்னுரிமை அடிப்படையில் ஒரு வார காலத்திற்குள் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story