கணவர் இல்லை வீட்டுக்கு வாங்க என அழைத்த இளம் பெண், திக், திக் சம்பவம்

கணவர் இல்லை வீட்டுக்கு வாங்க என அழைத்த இளம் பெண், திக், திக் சம்பவம்
X

பைல் படம்

கணவர் இல்லை வீட்டுக்கு வாங்க என அழைத்த இளம் பெண்ணின் பேச்சில் மயங்கிய வாலிபர் திக், திக் சம்பவத்தில் சிக்கினார்.

சென்னை அடையார் சாஸ்திரி நகர் 7வது தெரு வைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (39). நியூஸ் பேப்பர் ஏஜென்ட் இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு எழும் பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றபோது ஆவடி பகுதியைச் சேர்ந்த பிரசோரியானா (23) என்ற இளம்பெண்ணுடன் பழக் கம் ஏற்பட்டுள்ளது.

இந்நி லையில் சம்பவத்தன்று பிரசோரியானா தனது கணவர் வீட்டில் இல்லை , அதனால் நீங்கள் வீட்டுக்கு வாருங்கள் என செந்தில்கு மாரை போனில் அன்போடு அழைத் துள்ளார். இதனையடுத்து செந்தில்குமார் வீட்டிலேயே விருந்தா என்கிற சந்தோசத்தில் காரில் அங்கு சென்றுள்ளார்.

வீட் டுக்குள் செந்தில் குமார் சென்றபோது, அந்த இளம் பெண் உள்பட நான்குபேர் இருந்துள்ளனர். அவர்கள் செந்தில்குமாரை மிரட்டி அவரது போனில் உள்ள கூகுள் பே ஆப் மூலம் ரூ.13 ஆயிரம் பணத்தை மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

மேலும், அவர் அணிந்திருந்த செயின், பிரேஸ்லெட், மோதிரம் உள்பட 15 சவ ரன் தங்க நகைகள் மற்றும் 2 செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

பின்னர், அவரது கண்ணைக் கட்டி காரில் ஏற்றி வந்து மதுரவாயல் பைபாஸ் சாலை யில் விட்டுவிட்டு, அங்கு வந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென் றுள்ளனர்.

இது குறித்து ஆவடி காவல் நிலையத் தில் செந்தில்குமார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண் உள்பட 4பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!