சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை
சென்னை புழல் சிறையில் நகை திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி என்கிற காந்திமதி (வயது 50) என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயர்புரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டார்.
இவருக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திர எழுதி தர வராததால், தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் புழல் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே புழல் சிறை கைது உயிரழந்த சம்பவம் அடங்குவதற்குள் பெண் கைது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் நேற்று சிகிச்சைக்காக சென்ற கைது ராஜேஷ் உயிரிழந்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆா். நகா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் எ.ராஜேஷ் (50). இவா், சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த ஒரு வழக்கில் கடந்த ஆக.28-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
ராஜேஷுக்கு வெள்ளிக்கிழமை காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறைக் காவலா்கள், ராஜேஷை அங்குள்ள மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் மேல் சிகிச்சைக்காக ராஜேஷை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ராஜேஷ் உயிரழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu