திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல்

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல்
X

திருத்தணி பூ மார்க்கெட்டில் சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் 30 பேர் முகக்கவசம் அடையாததால் அபராதம் விதிக்கப்பட்டது

திருத்தணி பகுதியில் நோய்த்தொற்று பரவல் காரணமாக மளிகை காய்கறி பூ மார்க்கெட் மற்றும் பழக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் கடைகள் முன்பு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு எச்சரித்தது

இந்தநிலையில் திருத்தணி பூ மார்க்கெட்டில் பின்புறத்தில் சமூகவிலகல் இல்லாமல் அதிகளவில் மக்கள் குவிந்து கடைகளில் பூ போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார் தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் ஜெயராணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து சமூக விலகல் கடைபிடிக்காத நான்கு கடைகளில் தராசுகளை பறிமுதல் செய்தனர் மேலும் 30 பேருக்கு முக கவசம் அணியாததால் அவர்களிடம் அபராதமும் விதித்து எச்சரித்தனர்

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!