பூண்டி நீர்த்தேக்கத்தில் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு. வெள்ளஅபாய எச்சரிக்கை

பூண்டி நீர்த்தேக்கத்தில் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு. வெள்ளஅபாய எச்சரிக்கை
X

பூண்டி நீர்த்தேக்கம் - கோப்புப்படம் 

பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழக்கும் ஏரிகளில் முக்கிய நீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும்.

இந்த ஏரி 121 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதன் அளவு உயரம் 35 அடி, 3,231 மில்லியன் கன அடி நீா் சேமிக்க முடியும். இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் நீா் வரத்துக் கால்வாய், கிருஷ்ணா கால்வாய் மூலம் தண்ணீா் வருகிறது.

இந்த ஏரி நிரம்பினால் பேபி கால்வாய், கிருஷ்ணா நீா் முதன்மைக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் , சோழவரம் ஆகிய ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் நீா் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.

தற்போது பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 40,000 கன அடியாக உள்ளது. இதனால், பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 45,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!