மனைவி தொல்லை தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி கைது

மனைவி தொல்லை தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி கைது
X
காரை விற்று நகை வாங்கி தரும்படி மனைவி அடிக்கடி தொல்லை - தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் சதீஷ்குமாரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயிலில் தனது காருக்கு தானே தீ வைத்துவிட்டு மர்ம நபர்கள் எரித்துவிட்டதாக நாடகமாடிய பாஜக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை மதுரவாயல் போலீசார் போலீசார் கைது செய்தனர்.

காரை விற்று நகை வாங்கி தரும்படி மனைவி அடிக்கடி தொல்லை செய்ததாகவும், இதன்காரணமாக மன உளைச்சலில் இருந்ததால் தனது காருக்கு தானே காருக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

Next Story