கடவுளை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை
பக்தர்களையும் கடவுளையும் இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மெய்வழிச் சபை குறித்தும் மெய்வழி சாலை கடவுள் நம்பிக்கை உடைய பக்தர்களையும் கடவுளையும் இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மதத்துக்கு எதிராக பேசியுள்ள வீடியோவை சமூக வலைத் தளத்தில் இருந்து நீக்கவும் வலியுறுத்தி மெய்வழி சபை தொண்டர்கள் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மெய்வழிச்சாலை சபை மெய் ஆண்டவரை வனங்கிவரும் மெய்யடியார்கள் மோகன் என்பவர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதன் பின்னர் மெய்வழி அடியார் மோகன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறும்போது நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மெய்வழி சபை மெய்வழி ஆண்டவரை வனங்கி வருகிறோம் மேலும் அனைத்து மதமும் சமம் என சிறுபான்மையினராக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த யோகக்குடில் சிவகுமார் மற்றும் கோவையை சேர்ந்த சுப்பிரமணி ஆதித்தன் ஆகியோர் எங்களது மதத்தையும் ஆண்டவரையும் கொச்சைபடுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர் எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அந்த சமூக வலைத்தளத்தில் வெளிவரும் வீடியோவை நீக்க வேண்டும் என்றார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu