உடுமலையில் 60 ஆயிரம் கறவை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு

உடுமலையில் 60 ஆயிரம் கறவை மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு
X

கோப்பு படம்

உடுமலையில், 60 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடப்பாண்டுக்கான, இரண்டாவது தவணை கோமாரி நோய் தடுப்பூசி, கால்நடைகளுக்கு செலுத்தப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில், 60 ஆயிரம் மாடுகளுக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், நான்கு மாதம் முடிந்த இளங்கன்றுகள், சினை பசுக்கள், எருமைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதால், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறையும் என்று விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கால்நடை வளர்ப்போர், தடுப்பூசி செலுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare