உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகள் 2வது நாளாக போராட்டம்

உடுமலை உழவர் சந்தையில்   விவசாயிகள் 2வது நாளாக போராட்டம்
X

கோப்பு படம் 

உடுமலை உழவர் சந்தையில் வேளாண்மை அலுவலரை கண்டித்து 2வது விவசாயிகளை போராட்டம் செய்தனர்

உடுமலை உழவர் சந்தையில் மீண்டும் பிரச்னை தலை தூக்கியதால், 2வது நாளாக விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

உடுமலை நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் வேளாண்மை அலுவலர், உழவர்சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளை மரியாதை இல்லாமல் தரக் குறைவாக பேசுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் கடந்த 23 ம் தேதி ஒரு பெண் விவசாயி கீரை விற்பனை செய்யத் தொடங்கினார்.

அவர் தாமதமாக வந்ததாகவும், அவரை வேளாண்மை அலுவலர் முககவசம் போடும்படியும், வெளியே போகும்படியும் கூறியதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த பெண் விவசாயி பஸ் கிடைக்காததால் தாமதமாக வந்ததாக கூறியுள்ளார்.ஆனால், அந்த அலுவலர், பெண் என்றும் பார்க்காமல் அவரை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதனால், இந்த கூச்சலை பார்த்த உழவர் சந்தையில் இருந்த மற்ற விவசாயிகள் கடைகளில் வியாபாரத்தை நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து, சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு வியாபாரம் செய்ய தொடங்கினார்கள்.

அந்த அலுவலர் மீதான புகாரை தொடர்ந்து வேளாண் விற்பனைத்துறை மற்றும் வேளாண் வணிக, கோவை துணை இயக்குனர் சுந்தரவடிவேல் உழவர் சந்தைக்கு வந்தார். அவரிடம் வேளாண்மை அலுவலர் மீது விவசாயிகள் புகார் தெரிவித்தனர். வேளாண் அலுவலர் கூறும்போது, கீரை விற்பனை விவசாயிகள் நுழைவு வாயில் நடைபாதையில் வியாபாரம் செய்கின்றனர். அவர்களை கடைபகுதியில் விற்பனை செய்ய கூறியதாகவும், எல்லாரும் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று கூறியதாகவும், அதனால்தான் விவசாயிகள் பிரச்சினை செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு உழவர் சந்தை திறக்கப்பட்டது. ஆனால், உழவர் சந்தைக்குள் வரமறுத்தனர். விவசாயிகள் நாங்களே எங்களுக்குள் சமரசமாக பேசி, எந்த இடத்தில் கடை வைப்பது என்று முடிவு செய்து கொள்கிறோம். அதற்கு மட்டும் அனுமதி வேண்டும் என்றனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று வேளாண் அலுவலர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை முடிவுக்கு வராமல் நீண்டது. உழவர் சந்தை பரபரப்பான தகவல் கிடைத்ததும் உடுமலை போலீசாருக்கு கிடைத்து விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிரச்சினையை பெரிதாக்காதீர்கள் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். பின்னர், விவசாயிகள் காய்கறிகளை உழவர் சந்தைக்குள் கொண்டு சென்றனர். ஏற்கனவே கடை நடத்தி வந்த இடத்திலேயே வியாபாரம் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்