உடுமலை முதலை பண்ணைக்கு இனி போகலாம்: வனத்துறை 'பச்சைக்கொடி'

உடுமலை அருகே உள்ள முதலைப் பண்ணையை பார்வையிட, வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு முன் பூங்கா, ராக் கார்டன் அணையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் முதலைப்பண்ணை உள்ளது. இங்குள்ள பண்ணையில் பெண் முதலைகள் உள்ளிட்ட 103 நன்னீர் முதலைகள் வனத்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவற்றை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இச்சூழலில், சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக முதலை பண்ணைக்கு அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவில் வன விலங்குகளில் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. எனினும், கொரோனா ஊரடங்கு காரணமாக முதலைப்பண்ணை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பார்வையிட மீண்டும் அனுமதிவழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள், முதலைப்பண்ணையை பார்வையிட்டு செல்கின்றனர். குழந்தைகள் பூங்காவில் மகிழ்ச்சியாக விளையாடி செல்கின்றனர். எனினும், வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு மறு உத்தரவு வரும் வரையில் அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story