பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
X

பஞ்சலிங்க அருவி

உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்தி மலையில், அமணலிங்கேஸ்வரர் கோவில் இருக்கிறது. அதன் அருகில் வனப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இந்த அருவியில், பல்வேறு மூலிகைகள் கலந்த தண்ணீர் வருவதால், இதில் குளிக்கும் போது புத்துணர்வு கிடைக்கிறது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
எனினும், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்னமும் நீடிப்பதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுதுடன் திரும்பி சென்றனர். அருவியில் குளிப்பதற்கான தடையை நீக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!