நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
பைல் படம்
நீச்சல் பழக முற்படும் சிறுவர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, ஆங்காங்கே உள்ள நீர்நிலைப் பகுதிகளில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென உடுமலை மற்றும் சுற்றுப்பபகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வப்போது, நீச்சல் பழகவும், வெயில் தாக்கத்தை தணிக்க நீர் நிலைகளைத் தேடிச்சென்று குளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேநேரம், சிலர், தனக்குள் உண்டான திறனை வளர்த்துக்கொள்ளும் வகைகளுடன் யில் கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளில் ஈடு பட்டு வருகின்றனர். தொலை துாரத்தில் உள்ள நீர்நிலை களுக்குச்சென்று, குளிப்பதால், எதிர்பாராதவிதமாக உயிரிழப்பும் ஏற்படுகிறது.
குறிப்பாக, குளம் , கல்குவாரி, கிணறு, பி.ஏ.பி. , கால்வாய் போன்ற நீர்நிலைகளில், மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று உள்ளது. எனவே, ஆழமான, 5 அடிக்கு மேல் தண்ணீர் குடியிருப்பு பகுதி தேங்கியுள்ள நீர் நிலைகளை கண்டறிந்து, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu