சீரான குடிநீர் வேண்டி காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் வேண்டி காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
X

சீரான தண்ணீர் விநியோகம் கேட்டு ,காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

சீரான குடிநீர் வேண்டி காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை எல்லையில் செல்லம்பாளையம் பகுதி அமைந்துள்ளது. 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். திருமூர்த்தி அணையிலிருந்து பூலாங்கிணறு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த, 2 வாரமாக தண்ணீர் விநியோகம் சீராக இல்லை எனவும், கடந்த இரண்ட நாட்களாக தண்ணீர் விநியோம் சீராக இல்லை எனவும் கூறி, கிராம மக்கள், காலி குடங்களுடன் செல்லப்பம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு வந்த, தளி காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பிரச்னையில் உரிய கவனம் செலுத்துமாறு, கோட்டாட்சியர் மூலம், ஊராட்சி மன்ற நிர்வாகத்துக்கு, அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 'விரைவில், சீரான குடிநீர் வழங்கப்படும்' என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!