உடுமலை அருகே அரசுப் பேருந்தில் மினி வேன் மோதி விபத்து: 23 பேர் காயம்
விபத்தில் சிக்கிய மினி வேன் மற்றும் அரசு பஸ்.
திருப்பூர் மாவட்டம், பூளவாடி பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கோட்டமங்கலம் ஊராட்சி வழியாக மினி வேன் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அப்போது உடுமலையில் இருந்து பெல்லம்பட்டிக்கு அரசு பேருந்து 8ஏ சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து பூளவாடி அருகே மேட்டு சாலை பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டுருந்தபோது, அதிவேகமாக வந்த மினி வேன் பேருந்தின் பின்பக்கம் மீது பயங்கரமாக மோதியது. இதனால் மினி வேன் முன்பக்கம் மற்றும் அரசு பேருந்து பின் பக்கம் பலத்த சேதம் அடைந்தது.
இதனால் மினி வேனில் பயணம் செய்த 22 பேருக்கும், அரசு பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ௨௦ பேர் உடுமலையில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் படுகாயம் அடைந்தவர்களில் 3 பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பபட்டு உள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த குடிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu