எலையமுத்தூர் மாரியம்மன் கோவிலில் தீர்த்த, பால் குட ஊர்வலம்

எலையமுத்தூர் மாரியம்மன் கோவிலில் தீர்த்த, பால் குட ஊர்வலம்
X

எலையமுத்தூர் மாரியம்மன் கோவிலில் பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது.

உடுமலையை அடுத்த எலையமுத்தூர் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் மாரியம்மன் கோவில் சண்டி ஹோம திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு சுமார் 200 க்கும் மேற்பட்ட ஊர் பொது மக்கள் தீர்த்தகுடம், பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

இதனைத்தொடர்ந்து எலலையமுத்தூர் பகுதியில் முக்கிய வீதிகளின் வழியாக நடந்த ஊர்வலம், சிறப்பு பூஜை பிறகு முடிவடைந்தது. வருகிற 13ம் தேதி புதன்கிழமை மாரியம்மனுக்கு சிறப்பு சண்டி ஹோமப் பெருவிழா நடக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!