உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறு

உடுமலை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறு
X

உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ஆயத்தப்பணிகள், சிறப்பு பூஜையுடன்  தொடங்கியுள்ளது. 

உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, அதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடுமலையில் பிரபலமான மாரியம்மன் கோவில் உள்ளது. அடுத்த மாதம், 17ம் தேதி கும்பாபிேஷக விழா நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

அத்துடன், யாகசாலையை சுற்றி, நெல், கொள்ளு, உளுந்து, பாசிப்பயறு ஆகிய ஐந்து தானியங்கள், கலந்து பஞ்ச வித்துகள் போடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future