உடுமலையில் நெல் நடவு பணி தீவிரம்

உடுமலையில் நெல் நடவு பணி தீவிரம்

உடுமலையில் நடவு பணி முடிந்துள்ள விவசாய நிலம்.

உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டடுள்ளதால் நெல் நடவு பணி தீவிரமடைந்து உள்ளது.

உடுமலை அருகே கல்லாபுரம் சுற்றுப்பகுதியில் மூன்று போகத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் நேரத்தில் 1200 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு பருவமழையால், அமராவதி அணை நிரம்பி, பாசனத்துக்கு கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தயார் நிலையில் இருந்த விவசாயிகள் நாற்றாங்கால் பிடிங்கி நடவு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கல்லாபுரம் பகுதியில் நெல் நடவு பணி தீவிரமடைந்துள்ளது. நடவு கூலி உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் பற்றாகுறை நிலவுகிறது. நடப்பாண்டு அமராவதி அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.


Tags

Next Story