நாளை விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் விற்பனை மும்முரம்

நாளை விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் விற்பனை மும்முரம்
X

பைல் படம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை பகுதியில் களிமண் விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்தது.

தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்டது. வீடுகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தனி நபர்கள் மூலம் நீர் நிலைகளில் கரைக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாசு ஏற்படுத்த வகையில் களிமண் சிலைகள் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சிலை விற்பனையாளர்கள் கூறுகையில், பெரிய விநாயகர் சிலைகள் விற்பனை இல்லை. சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் மட்டும் விற்பனை செய்கிறோம். களி மண்ணால் செய்யப்பட்ட இரண்டு அடி சிலைகள் விற்பனை நடக்கிறது. ஆறு அடி வரையிலான சிலைகளின் விற்பனை பெரிய அளவில் இல்லை, என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!