பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு; அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த நீர்

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு;  அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த நீர்
X

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்.

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் கோவிலை் சூழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான்பாறையில் கடந்த இரண்டுநாட்களாக கன மழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக பஞ்சலிங்க அருகில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால், அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை சுற்றி வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!