யாரா இருந்தா என்ன? உடுமலையில் அமைச்சர் கார் சோதனை

யாரா  இருந்தா என்ன?  உடுமலையில் அமைச்சர் கார் சோதனை
X
உடுமலையில் அமைச்சரின் காரையும் நிறுத்தி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையிட்டனர்.

உடுமலையில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் காரை தேர்தல் கண்காணிப்புக்குழு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

தமிழக சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. எமுறையாக விதிமுறைகள் பின்பற்றப் படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ பதிவு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் ஆங்காங்கு திடீர் சோதனைகளை நடத்துவார்கள்.

அந்த வகையில் நேற்று உடுமலை நகரில் தளி சாலையில் டி.வி.பட்டிணம் அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் உடுமலை சட்டமன்றத்தொகுதி அ.தி.மு.க.வேட்பாளரும், கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பிரசத்திற்காக தளி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பறக்கும்படையினர் அமைச்சரின் காரையும் மற்ற கார்களை போலவே சோதனை செய்தனர். ஆனால் அமைச்சரின் காரில் பணமோ, பரிசுப்பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனைக்கு பின்னர், அவர் பிரசாரத்திற்கு சென்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil