உடுமலை மலைவாழ் மக்களுக்கு கொரோனா - தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை தடை

உடுமலை மலைவாழ் மக்களுக்கு கொரோனா -  தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை தடை
X
மலைவாழ் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை அமராவதி வனச்சரகங்களில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் அமைந்து உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில், தன்னார்வலர்கள் பலர், மலைவாழ் மக்களுக்கு உதவி வழங்கி வந்தனர்.

இந்நிலையில், மலைவாழ் மக்கள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தன்னார்வலர்கள் மற்றும் வெளிநபர்கள் நேரடியாக மலைவாழ் மக்களுக்கு உணவு வழங்குவதற்கு, வனத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மலைவாழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்க நினைக்கும் தன்னார்வலர்கள், உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலகத்திலோ அல்லது மாவட்ட வன அலுவலகத்திலோ வழங்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!