உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்

உடுமலை நகராட்சியில் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த திருப்பூர் கலெக்டர்
X

உடுமலை நகராட்சி பள்ளியில் நடந்த முகாமை ஆய்வு செய்ய வருகை தந்த கலெக்டர் வினீத்.

உடுமலை நகராட்சியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, திருப்பூர் கலெக்டர் வினித் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 630 க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனியாண்டவர் நகர நடுநி்லைப்பள்ளி, கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாம்களை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வீனித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, முறையாக தடுப்பூசி போடப்படுகிறதா என டாக்டர்களிடம் விவரம் கேட்டறிந்தார். வருவாய் கோட்டாட்சியர் கீதா, தாசில்தார் ராமலிங்கம் மற்றும் உடுமலை நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா