கொப்பரைக்கு விலையில்லை : உடுமலை பகுதி விவசாயிகள் கவலை

கொப்பரைக்கு விலையில்லை : உடுமலை பகுதி விவசாயிகள் கவலை
X

கோப்பு படம் 

கொப்பரைக்கு நிலையான விலை கிடைக்காததால், உடுமலை பகுதி விவசாயிகள், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் தேங்காய்களை, கொப்பரையாக மதிப்புக்கூட்டி, விற்பனை செய்கின்றனர். இதற்காக இப்பகுதியில், நுாற்றுக்கணக்கான கொப்பரை உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சில வாரங்களாக, கொப்பரை விலை நிலையாக இல்லை. ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு கீழ் சென்றதால், விவசாயிகள், கொப்பரை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர் விலை வீழ்ச்சியால், உலர் களங்களில், கொப்பரை உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தென்னந்தோப்புகளில், தேங்காய் கொள்முதலையும், வியாபாரிகள் குறைத்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai future project