பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு

பழங்குடியின மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு
X

உடுமலை மணல்திட்டு பழங்குடியினர் கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது. 

உடுமலையில், மலைவாழ் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டது.

அடுத்தமாதம், 25ம் தேதி, கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏழை, எளியோருக்கு உதவி செய்வதை மையக்கருத்தாக கொண்ட இந்த பண்டிகையை முன்னிட்டு, உடுமலை தென்னிந்திய திருச்சபை மறைமாவட்டம் சார்பில், உடுமலை மணல் திட்டு பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு, உதவிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா, 1,000 ரூபாய் மதிப்புள்ள மளிகை சாமான், போர்வை, கேக் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மறை மாவட்ட தலைவர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!