ஆனைமலை விவசாயிகள் பீன்ஸ் சாகுபடி பணிகளில் தீவிரம்..!
பீன்ஸ் சாகுபடி (கோப்பு படம்)
Udumalaipattai agriculture news in tamil-உடுமலையை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.
கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யாமல் வறட்சியாகக் காணப்பட்டது. அதனால், மலைப்பகுதி ஆறுகளில் நீர் வரத்தும் குறைந்து போனது. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் விவசாயம் செய்யமுடியாமல் இருந்து வந்தனர். மேலும் அவர்கள் சீமாறு தயாரிக்கும் சுய தொழிலும் செய்து வந்தனர். ஆனால் சீமாறு தயாரிப்பிற்கு உதவும் மூலப்பொருளான தைலப்புற்களும் வறட்சியால் காய்ந்துவிட்டன. அதனால் விவசாயமும் செய்யமுடியாமல் சீமாறு தயாரிக்கவும் முடியாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. அதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை பெய்துள்ளதால் விவசாய நிலத்தை பண்படுத்தி சீரமைத்து பீன்ஸ் சாகுபடி செய்துள்ளனர். தற்போது செடிகள் ஓரளவுக்கு வளர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் பூ விடும் தருணத்தில் இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அதனால், நீர் பாய்ச்சுதல், பீன்ஸ் செடிகளுக்குள் களை எடுத்தல், உரம் இடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால், பீன்ஸுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மலைவாழ் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாகியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu